Latestமலேசியா

eWallet-டில் கூடுதல் பாதுகாப்பு அம்சம்; eKYC Verification கட்டாயமாகிறது

கோலாலம்பூர், மார்ச் 1 –

Touch n Go நிறுவனம், கூடுதல் பாதுகாப்பு அம்சமாக, இவ்வாண்டு இறுதிக்குள் தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் Know Your Customer அல்லது eKYC சரிபார்ப்பு முறையைக் கட்டாயமாக்கவிருக்கிறது.

நடப்பில் உள்ள வாடிக்கையாளர்களில் 77 விழுக்காட்டினர் அந்த eKYC Verification-னைச் செய்திருப்பதாக TnG Digital-லின் தலைமை செயல் அதிகாரி Allan Ni கூறியிள்ளார்.

Know Your Customer அதாவது உங்கள் வாடிக்கையாளரை அறிந்துக் கொள்ளுங்கள் எனும் இந்த டிஜிட்டல் சரிபார்ப்பு முறை, வாடிக்கையாளர்களின் TnG eWallet கணக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்யும்.

அதோடு, டிஜிட்டல் பணபரிமாற்ற மோசடியைத் தவிர்க்கவும், அது போன்ற சம்பவங்களில் வாடிக்கையாளர்களுக்கு TnG Digital உதவும் வகையிலும் இந்த eKYC Verification செயல்படும் என அலன் கூறினார்.

இன்னும் இந்த eKYC Verification முறையை செயல்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு TnG Wallet நினைவூட்டல் அனுப்பும் எனவும் அவர் குறிப்பிட்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!