Latestமலேசியா

Glenmarieயில் விபத்து: இருவர் பலி, ஐவர் காயம்

ஷா ஆலாம், அக்-12-Hicom-Glenmarie தொழிற்பேட்டைப் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஐவர் காயமுற்றனர். அவ்விபத்தில் Proton Wiraவும் Proton Exoraவும் மோதிக் கொண்டன.

Proton Wiraவில் 19தில் இருந்து 20 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள் பயணித்தனர். அவர்களில் 20 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 19 வயதுடைய மற்ற இருவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் Ashrul Riezal Ashbar தெரிவித்தார்.

Exora காரில் இருந்த 29 வயதுடைய பெண்ணும், 27 மற்றும் 28 வயதுடைய இரு ஆண்களும் சிறிய அளவில் காயமடைந்ததாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!