Latestமலேசியா

Goodyear தொழிற்சாலை ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க 22 நிறுவனங்கள் முன்வந்தன

கோலாலம்பூர், மார்ச் 27 – Goodyear Malaysia Berhad தொழிற்சாலை மூடப்படவிருப்பதை தொடர்ந்து பாதிக்கப்படவிருக்கும் அந்த தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு 22 உள்நாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் Goodyear நிறுவனத்தில் இதற்கான முகப்பிடங்களை திறக்கவிருப்பதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் V.Paparaidu தெரிவித்திருக்கிறார். Goodyear தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அந்த நிறுவனங்கள் முன்வந்திருப்பதாக அவர் கூறினார். எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்காக முகப்பிடங்களை Goodyear தொழிற்சாலையிலேயே திறப்பதற்கு அந்த 22 நிறுவனங்களும் முன்வந்ததாக Paparaidu தெரிவித்தார். இன்று Goodyear தொழிற்சாலைக்கு வருகை புரிந்து அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளை சந்தித்தபின் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் சிலாங்கூர் Perkesoவின் இயக்குனரும் கலந்துகொண்டார். ஷா அலாமில் இயங்கிவரும் உலகளாவிய டயர் உற்பத்தி தொழிற்சாலையான Goodyear எதிர்வரும் Jun 30ம்தேதியுடன் தனது நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு வேலை செய்துவந்த 550 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கவிருக்கின்றனர். பாதிக்கப்படும் 550 தொழிலாளர்களுக்கும் சொக்சோ உதவித் தொகையை வழங்கியிருப்பதோடு MyFutureJobs அகப்பக்கம் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு உதவியும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக Paparaidu கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!