Latestமலேசியா

Google Map & Waze-சில் ‘சட்டவிரோத கோயில்’ லேபிள்கள் தொடர்பான புகார்கள் விசாரிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல்- 5 – Google மற்றும் Waze வரைப்படங்களில் ‘சட்டவிரோதமானவை’ என இந்து ஆலயங்கள் முத்திரைக் குத்தப்பட்ட சம்பவம், சட்டம் 588 எனப்படும் தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இணையக் கட்டமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியக் கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக, தேசியப் போலீஸ் படையின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.

ஒருவேளை நிந்தனை அம்சங்கள் கண்டறியப்பட்டால், தேச நிந்தனைச் சட்டத்தின் கீழும் அச்சம்பவம் விசாரிக்கப்படும்; எனினும், அது உள்ளடக்கத்தைப் பொறுத்து என்றார் அவர்.

Google வரைப்படத்தில் நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் ‘சட்டவிரோதமான ஆலயங்கள்’ என பொறுப்பற்றத் தரப்பினரால் செய்யப்பட்டுள்ள லேபிள்களை அகற்ற, அரசாங்கம் Google நிறுவனத்துடன் ஒத்துழைக்க வேண்டுமென, உரிமைக் கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் முன்னதாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

Google-லின் கீழ் இயங்கும் Waze போக்குவரத்து செயலியிலும் இந்த ‘ சட்டவிரோத ஆலயங்கள்’ என்ற முத்திரை இருப்பது கண்டறியப்பட்டது.

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய இடமாற்ற விவகாரம் எழுந்த பிறகு, யாரோ சிலரால் இது உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!