Latest

Humane World for Animals-சுடன் ஒத்துழைக்கும் முதலாவது கல்வி நிறுவனம் Sunshine கல்விக் குழு

 

கோலாலம்பூர், செப்டம்பர்-26,

கூண்டுகளில் அடைக்கப்படாத கோழிகளின் முட்டை உற்பத்தியை ஊக்குவித்து, அதன் மூலம் பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தவிர்க்கும் நோக்கில், Humane World for Animals மற்றும் Malaysia Cage-Free Egg Producers Organization அமைப்புகளுடன் Sunshine கல்விக் குழு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இதன் வழி Sunshine கல்விக் குழு, மலேசியக் கல்வித் துறையில் முதன் முறையாக உலகளாவிய Cage-Free இயக்கத்தில் இணைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட Humane World for Animals தற்போது உலகின் 52 நாடுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவ்வகையில் அண்மையில் நடைபெற்ற MoU மற்றும் ‘பெருநிறுவன ஊக்கி ஆய்வரங்கில் Sunshine கல்விக் குழுவின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான Dr ஆர். வி. ஷியாம் பிரசாத், விருந்தினராகப் பங்கேற்று கலந்துரையாடினார்.

இந்த ஒத்துழைப்பானது வெறும் நிலைத்தன்மை (Sustainability) குறித்து மட்டுமல்ல, மாறாக எதிர்காலத்தை உருவாக்குவது பற்றியதும் ஆகுமென, தனதுரையில் Dr ஷியாம் கூறினார்.

இன்றைய குழந்தைகளே நாளைய சமூக மாற்றத் தலைவர்கள்; அவர்களுக்கு இரக்கம், அன்பு, மனிதநேயம் ஆகிய மதிப்புகளை விதைப்பதே உண்மையான முன்னேற்ற நாட்டை உருவாக்கும்.

Sunshine கல்விக் குழு, கல்வி உலகில் இரக்கம், நிலைத்தன்மை, உலகளாவிய பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் முன்னோடியாகத் தன்னை பெருமையுடன் நிலைநிறுத்துகிறது என்றார் என்றார் அவர்.

மூத்த சமூக ஆர்வலர் தான் ஸ்ரீ லீ லாம் தாய், விவசாய மற்றும் உணவு உத்தரவாதத் துறை அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ நொராஸ்மான் ஆயோப், MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சித் தலைவர் புனிதன் பரமசிவன், Humane World Animals பிரதிநிதியும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான Dr சரவண குமார் எஸ். பிள்ளை உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள் ஆவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!