Latestமலேசியா

KL-லில் கேளிக்கை மையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; தொழில் போட்டியே காரணம் என போலீஸ் சந்தேகம்

கோலாலம்பூர், மே-15, கோலாலம்பூர், Jalan Yap Kwan Seng-கில் இரவு கேளிக்கை மையமொன்றில் மே 9-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு, தொழிலில் ஏற்பட்ட போட்டியே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனவே அதில் குண்டர் கும்பல் அம்சம்  எதுவும் இல்லை என இதுவரையிலான விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Datuk Mohd Rusdi Mohd Isa தெரிவித்தார்.

ஆகக் கடைசியாக நேற்று முன்தினம் ஒரு சந்தேக நபர் கைதானார்.

இதையடுத்து இதுவரை மொத்தம் 6 பேர் விசாரணைக்காகக் கைதாகியுள்ளதாக அவர் சொன்னார்.

தாக்குதலுக்குத் திட்டமிட்டவர், கூலிக்கு ஆள் அமர்த்தியவர், பெட்ரோல் குண்டுகளை வீசியவர்கள் என அவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்னும் இரண்டு மூன்று பேர் வெளியில் இருக்கின்றனர்.

அவர்களும் பிடிபட்டால் மேலும் துப்புத் துலங்கும் என Datuk Rusdi நம்பிக்கைத் தெரிவித்தார்.

சம்பவத்தன்று அதிகாலை 2 மணிக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 மர்ம நபர்கள், அக்கேளிக்கை மையைத்தை நோக்கி 2 பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றது CCTV கேமராவில் பதிவாகியிருந்தது.

அதில் அங்கு தீ ஏற்பட்டு பொது மக்கள் அதை அணைக்க முயலும் காட்சிகள் அடங்கிய காணொலியும் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!