Latestமலேசியா

KLCC முன் வெளிநாட்டவர்கள் சோளம் விற்கும் காணொளி வைரல்; இணையவாசிகள் சினம்

கோலாலம்பூர், ஜனவரி 2 – நாட்டின் பிரபல சுற்றுலாத்தளமாக திகழும் KLCC அருகே சாலையோரத்தில், இரு வெளிநாட்டவர்கள், வறுக்கப்பட்ட சோளத்தை விற்பதை காட்டும் காணொளி, சமூக ஊடக பயனர்களின் சினத்தை தூண்டியுள்ளது.

X சமூக ஊடகத்தில், @isusemasaviral எனும் கணக்கில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த காணொளியில், ஒருவர் சோளத்தை தயார் செய்யும் வேளை ; மற்றொருவர் அதனை வாட்டுகிறார்.

அந்த காணொளிக்கு கீழ், கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதிவிடப்பட்டுள்ளது.

“அவர்களை உடனடியாக கைதுச் செய்யுங்கள். KLCC முன்புறம் சோளத்தை வறுப்பதால், அடர்த்தியான புகையையும், கழிவுகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள், புகார் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு இரவும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுங்கள்” எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்த காணொளியை இதுவரை 12 லட்சம் பேர் பார்வையிட்டுள்ள வேளை; பலர் சினத்தையும், கண்டனத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

“சமூக ஊடகங்களில் பதிவிடுவதாலும், புகார் செய்வதாலும், ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆக்கப்பூர்வமான அமலாக்க நடவடிக்கை தேவை” என ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ; “மக்கள் அதிகம் கூடும், கோலாலம்பூர் சுற்றுவட்டாரப் பகுதியை, அசுத்தமாக்குவதை நிறுத்துங்கள்” என மற்றொருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!