Latestமலேசியா

KLIA-வில் துப்பாக்கிச் சூடு: மக்காவுக்குத் தப்பியோட திட்டம் போட்ட சந்தேக நபர்

கோத்தா பாரு, ஏப்ரல் 16 – KLIA-வில் துப்பாக்கிச் சூடு நடத்தி தலைமறைவாகி நேற்று கைதான ஆடவன், போலீஸ் சந்தேகப்பட்ட படியே வெளிநாட்டுக்குத் தப்பியோடவே திட்டமிட்டிருந்தான்.

அதுவும் தாய்லாந்து வழியாக சவூதி அரேபியாவின் மக்காவுக்கு அந்நபர் தப்பியோடவிருந்தது அம்பலமாகியுள்ளது.

தாய்லாந்து நாணயமான Baht, சவூதி அரேபிய நாணயமான Riyal ஆகியவற்றை உள்ளடக்கிய பண நோட்டுகள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவனது வெளிநாட்டுப் பயணத் திட்டம் ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஸ்ரீ Mohd Shuhaily Mohd Zain அதனைத் தெரிவித்தார்.

எனினும் மேல் விசாரணைகள் தொடருவதாக அவர் சொன்னார்.

ரொக்கப் பணம் தவிர்த்து, Glock 19 ரக ஆஸ்திரிய கைத்துப்பாக்கி, 33 உயிருள்ள தோட்டாக்கள், பந்து பட்டாசு, 6 கைப்பேசிகள், கடப்பிதழ், மற்றவர்களுக்குச் சொந்தமான 4 அடையாள அட்டைகள் ஆகியவையும் அந்நபரிடம் இருந்துக் கைப்பற்றப்பட்டன.

கோத்தா பாரு, Pakar Perdana மருத்துவமனையில் இருந்து வெளியேறும் போது திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி வாக்கில் அந்நபர் முன்னதாகக் கைதானார்.

தனது மருத்துவ பரிசோதனை அறிக்கையை எடுப்பதற்காக அம்மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பே அம்மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அறிக்கைத் தயாராகி விட்டது.

ஒருவேளை விசா எடுப்பதற்காகத் தான் மருத்துவ பரிசோதனையை அவர் மேற்கொண்டாரா என்பது குறித்தும் போலீஸ் விசாரிக்கிறது.

Hafizul Harawi எனும் 38 வயது
சந்தேக நபர், திங்கட்கிழமை வரை 7 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!