கோலாலம்பூர், டிச 17 – Krubong கில் கடந்த ஆண்டு இரு பதின்ம வயதினருக்கு
மரணம் ஏற்படும் அளவுக்கு ஆபத்தாக வாகனம் ஓட்டியதாக ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை அடுத்த வாரம் திருமணம் செய்யவிருக்கும் மணமகன் மறுத்துள்ளார். மாஜிஸ்திரேட் நோர் ஷலியாத்தி முகமட் சோப்ரி முன்னிலையில் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டபோது 26 வயதுடைய அந்த இளைஞர் மறுத்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம்தேதி இரவு மணி 9.54 க்கு மலாக்கா தெங்கா, ஜாலான் Krubong Permai யில் ஆபத்தான வகையில் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய எர்வான் இட்ரிஸ்( Erwan Idris ) மற்றும் புத்ரபா நோர்ஷாகிர் புத்ராவிராவான் ( Putra Norsyaqir Putrawirawan ) ஆகியோருக்கு மரணம் ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டுகள் சிறை மற்றும்
கூடியபட்சம் 50,000 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும் 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின்
41 உட்பிரிவு (1) விதியின் கீழ் மற்றும் திருத்தப்பட்ட 1999 சட்டத்தின்கீழ் அந்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 6,500 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்ட அந்த நபருக்கு எதிரான மறுவிசாரணை ஜனவரி 27 ஆம் தேதி செவிமடுப்பததற்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.