Latestமலேசியா

KTM Komuter மாதாந்திர பயண அட்டை RM50-க்கு அறிமுகம்

கோலாலம்பூர், அக்டோபர் 12 – ‘KTM Komuter’ ரயில் சேவைகளுக்கான 50 ரிங்கிட் மாதாந்திர பயண அட்டை, வரும் டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

MyKommuter50 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயண அட்டை மலேசியக் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மைகாட் (MyKad) மூலம் பதிவு செய்து, 30 நாட்களுக்கு வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ளலாம்.

நிதி அமைச்சின் ஒப்புதலுக்குப் பிறகு, நவம்பர் மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதும் இந்தப் பயண அட்டையை அறிமுகப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், வடக்கு மண்டலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 12 புதிய ரயில் தொகுதிகளைச் சேவையில் இணைக்கவும், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் ரயில் சேவைகளின் அடிக்கடியான இயக்கத்தைப் படிப்படியாக அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!