Latestமலேசியா

LGBTQ அம்சங்களுடன் வரும் படங்களுக்கு அனுமதி கிடையாது: உள்துறை அமைச்சு திட்டவட்டம்

கோலாலம்பூர், மார்ச்-22, சர்ச்சைக்குரிய LGBTQ அம்சங்களைப் பிரபலப்படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்ட படங்களின் திரையீட்டுக்கு, முழு கதையோட்டத்தைப் பொருத்து, மலேசிய திரைப்பட தணிக்கை வாரியம் LPF அனுமதி வழங்காது.

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுன் நசுத்தியோன் இஸ்மாயில் அதனை மறு உறுதிபடுத்தியுள்ளார்.

LGBTQ மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை தாங்கி வரும், Islamophobia எனப்படும் இஸ்லாத்துக்கு எதிரான மனநிலையை விதைக்கும், மற்றும் முறைத் தவறிய சமய போதனைகளைப் பரப்பும் அம்சங்களுடன் வரும் படங்களுக்கும், அதே கதி தான் அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்நாட்டு மக்களின் நம்பிக்கை மற்றும் வாழ்வியல் கூறுகளுக்கு எதிரான மேற்கண்ட அம்சங்களைத் தாங்கியக் கலைப் படைப்புகள், அண்மைய காலமாக மலேசிய சந்தைக்குள் ஊடுருவி வருகின்றன.

ஆனால், LGBTQ வாழ்க்கை முறையை மலேசியா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.

ஆக, தயாரிக்கப்படும் திரைப்படங்கள், அனைத்து சாராரும் பார்க்கும் வகையில் இருப்பதை உறுதிச் செய்ய ஏதுவாக, திரைத்துறையினருக்கு போதிய ஆலோசனைகளை வழங்க LPF தயாராக இருப்பதாக சைஃபுடின் உத்தரவாதம் அளித்தார்.

தணிக்கைக்கு வரும் படங்களை அநியாயத்துக்கு கத்தரிப்பதாக ஒரு பக்கம் LPF சாடப்படுகிறது; ஆனால், உள்ளூர் மக்களின் வாழ்வியல் பண்புகளுக்கு இழுக்கு எதுவும் வராதிருப்பதை உறுதிச் செய்யும் கடப்பாடு தணிக்கை வாரியத்துக்கு இருப்பதை யாரும் புரிந்துக் கொள்வதில்லை என்றார் அவர்.

இவ்வேளையில், OTT உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த, 2002 திரைப்பட தணிக்கைச் சட்டத்தின் கீழ் LPF-கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

என்றாலும் வரும் காலங்களில் LPF-பின் அதிகாரத்தை விரிவுப்படுத்துவது குறித்து தொடர்புத் துறை அமைச்சுடன் கலந்து பேச KDN தயாராக இருப்பதாக சைஃபுடின் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!