Latestமலேசியா

LRT பயனர்களின் பேச்சை பொருட்படுத்தாத ஆடவர்; குவியும் கண்டனம்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 8 – LRT இலகு இரயிலில் பயணித்த ஆடவர் ஒருவர், பயணிகள் அமரும் இருக்கையில் தனது பயணப் பையை வைத்திருந்ததோடு, அதனை அகற்றுமாறு கோரிய இதர பயணிகளை பொருட்படுத்தாது சுயநலமாக நடந்து கொண்ட சம்பவம், பெரும் கண்டனத்தை பெற்று வருகிறது.

அச்சம்பவம் தொடர்பான புகைப்படத்தை, @annoyedmsian தனது X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள வேளை; அதில் அமர இடம் இல்லாமல் பலர் நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதோடு, இருக்கையில் பயணப் பையை வைத்திருந்த ஆடவர் அதனை அகற்றவில்லை என்பதோடு, ஒன்றுமே நடக்காததை போல கைப்பேசியை பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் அதில் காண முடிகிறது.

“LRT இரயில் பயணிப்பவர்கள் இந்த ஆடவரிடம் எச்சரிக்கையாக இருங்கள். பையை அகற்றவில்லை என்பதோடு, கடுமையாகவும் நடந்து கொண்டார்” என அந்த காணொளியின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த காணொளி இதுவரை நான்காயிரத்து 200 முறை பகிரப்பட்டுள்ள வேளை ; ஐயாயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

கருத்துகளை பதிவிடும் பகுதியில், பலர் அந்த ஆடவரின் செயலை சாடியுள்ள வேளை ; பொதுவில் காலணிகளை கழற்றிவிட்டு அமர்ந்திருந்தது குறித்தும் சினத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“இவரை பலமுறை நான் LRT இரயில் பார்த்திருக்கிறேன். யாராவது பேசினால், கேபமாக நடந்து கொள்வார்” என இணைய பயனர் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;

“நானாக இருந்தால், அவரது பையை தரையில் எடுத்து போட்டிருப்பேன்” என மற்றொருவர் சினத்தை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!