Latestமலேசியா

MACC யின் விசாரணைக்கு எதிரான டாய்ம், அவரது குடும்பத்தினரின் சீராய்வு மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

கோலாலம்பூர், மார்ச் 4 – முன்னாள் நிதியமைச்சர் Daim Zainuddin மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் நிதி விவகாம் தொடர்பாக MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட விசாரணையை தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் செய்துகொண்ட சீராய்வு மனுவை இன்று உயர் நீதிமன்றம் நிராகரித்தது. விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுவரும் விசாரணையை நிறுத்துவதற்கான நடவடிக்கையை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய முடியாது என்பதால் துன் டைய்ம் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்துகொண்ட சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி Wan Ahmad Farid Wan Salleh தீர்ப்பளித்தார்.

2017 ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் கட்டுப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒரு வழக்கறிஞரான லத்தீபா கோயா MACC க்கு முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிய முடிவை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் சவால் விடுத்திருந்தார். MACC, குற்றவியல் விசாரணை அல்லது விசாரணையின்போது அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது அதனை சீராய்வு செய்வதற்கான வழக்கு மனுவை நீதித்துறை ஏற்றுக்கொள்ளாது என அப்போது கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி Daim மற்றும் அவரது குடும்பத்தினரின் வழக்கு மனுவை Wan Ahmad தள்ளுபடி செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!