Latestமலேசியா

MPV வாகனத்தின், பின் பயணிகள் இருக்கையில் மெத்தை விரிப்பது ஆபத்தானது ; ஜேபிஜே எச்சரிக்கை

ஷா ஆலாம், ஏப்ரல் 16 – MPV பல்நோக்கு வாகன பயனர்கள் சிலர், நீண்ட தூர பயணத்தின் போது, பின் பயணிகள் இருக்கை பகுதியில், மெத்தைகள் அல்லது toto போர்வைகளை விரித்து உறங்குவது குற்றமாகும்.
அதோடு, அச்செயல் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடுமென, JPJ – சாலை போக்குவரத்து துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ரோஸ்பியாகுஸ் தஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாகனம் பயணிக்கும் போது, ஓட்டுனர் உட்பட பயணிகள் அனைவரும் அவரவர் இருக்கையில் முறையாக அமர்ந்திருக்க வேண்டும்.

அதோடு, 2009-ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி, பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும், சீட் பெல்ட் அல்லது பாதுகாப்பு பட்டையை அணியும் நடைமுறையும் அமலில் உள்ளது.

36 கிலோகிராமுக்கு குறைவான எடை அல்லது 136 சென்டிமீட்டருக்கும் குறைவான உயரம் அல்லது 12 வயதுக்கு குறைவான குழந்தைகள், வாகனம் பயணிக்கும் பூது, “குழந்தைகள் பாதுகாப்பு இருக்கையை” பயன்படுத்த வேண்டும்.

பாதுகாப்பை உறுதிச் செய்யவும், விபத்து ஏற்படும் போது மோசமான விளைவுகளை தவிர்க்கவும் அந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதனால், வாகனமோட்டிகளும், பயணிகளும் அதனை முழுமையாக பின்பற்ற வேண்டுமென ரோஸ்பியாகுஸ் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, MPV பல்நோக்கு வாகனம் ஒன்றின் பின்புற பயணிகள் இருக்கையில் போடப்பட்டிருந்த Toto-வில் குழந்தை ஒன்று படுத்திருப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று நேற்று வைரலானது.

அதனை தொடர்ந்து, நம் நாட்டில் சாலை பாதுகாப்பு மீதான விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே இருப்பதாக, ஹெஸெரி சம்சூரி எனும் X சமூக ஊடக பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!