Latestமலேசியா

MyPPP கட்சியின் இடைக்கால தலைவராக லோக பால மோகன் நியமனம்

கோலாலம்பூர், நவ 19 – MyPPP கட்சியின் இடைக்கால தலைவராக அக்கட்சியின் மூத்த உதவித் தலைவரான லோக பால மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். MyPPP தலைவராக இருந்த மாக்லின் டென்னிஸ் டி குரூஸ் அண்மையில் இறந்ததைத் தொடர்ந்து கட்சியின் இடைக்கால தலைவராக லோக பால மோகன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை செயலாளர் இந்தர் சிங் பியாந்த் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். கட்சி தலைவர் பதவி திடீரென காலியாகும் பட்சத்தில் மூத்த உதவித் தலைவர் இடைக்கால தலைவராக நியமிக்கப்படுவதை MyPPP சட்டவிதியில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப லோக பால மோகன் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தர் சிங் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!