Latestமலேசியா

MyPPP தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியல்ல; தோழமைக் கட்சியே; சாஹிட் ஹமிடி விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை-1 – MyPPP இப்போது தேசிய முன்னணியின் (BN) உறுப்புக் கட்சியல்ல; மாறாக Friends of BN எனப்படும் பாரிசானின் தோழமைக் கட்சி தான்.

தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் நான்கு மட்டுமே; அம்னோ, ம.சீ.ச, ம.இ.கா மற்றும் பி.பி.ஆர்.எஸ்.

மற்ற அனைத்து 11 கட்சிகளும் தோழமைக் கட்சிகளே; தோழமைக் கட்சிகள் என்ற முறையில் அந்த 11 கட்சிகளும் சமமாகவே நடத்தப்படுவதாக, துணைப் பிரதமருமான சாஹிட் சொன்னார்.

தேசிய முன்னணி MyPPP கட்சியை மரியாதையுடன் நடத்த வேண்டும் என அதன் இடைக்காலத் தலைவர் டத்தோ லோக பால மோஹன் கடந்த வாரம் கேட்டுக் கொண்டிருந்தது தொடர்பில் சாஹிட் ஹமிடி கருத்துரைத்தார்.

மே மாதம் நடைபெற்ற சிலாங்கூர், குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் என்னமோ தன்மானமே இல்லாத கட்சி போன்று MyPPP நடத்தப்பட்டதாகவும், எனவே எதிர்வரும் பினாங்கு, சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசானின் பிரச்சாரங்களில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் டத்தோ லோக பால மோஹன் கூறியிருந்தார்.

தேவையான நேரத்தில் மட்டும் எங்களைப் பயன்படுத்திக் கொள்வது, மற்ற நேரங்களில் கண்டு கொள்வதில்லை என அவர் குறைப்பட்டுக் கொண்டார்.

2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை இழந்த போதும் கூட, மற்றவர்களைப் போல் அதனை விட்டுச் செல்லாமல் இன்னமும் விசுவாசமாக இருக்கும் MyPPP கட்சியை பாரிசான் புறக்கணிப்பது நியாயமல்ல என டத்தோ லோக பால மோஹன் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!