Latestமலேசியா

PADU தரவுத் தளத்தில் தகவல்களை திருட முடியாது – பாமி பாட்சீல்

புத்ரா ஜெயா , மார்ச் 31 – நாட்டின் பிரதான தரவுத் தளமான PADU விலிருந்து தகவல்களை திருட முடியாது. நாட்டின் முக்கிய இணைய பாதுகாப்பு தளான NACSA மற்றும் மலேசிய இணைய பாதுகாப்பு முறை வலுவாக இருப்பதாக தொடர்பு அமைச்சர் ‘Fahmi Fadzil’ உறுதியளித்திருக்கிறார்.

மக்களின் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்கும் நோக்கத்தில் வழிகாட்டியாகவும், ஆலோசனை தரவு தளமாகவும் திகழும் PADU வின் புள்ளி விவர முறைகள் முழு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதால் அதில் எவரும் ஊடுருவ முடியாது என அவர் தெரிவித்தார்.

மேலும் பாடு வில் இருக்கும் தரவுகள் Encrypted முறையில் வைக்கப்பட்டுள்ளதால் அந்த தகவல்களை எந்த தரப்பும் ஊடுவ முடியாது என அண்மையில் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்திருப்பதால் PADU வில் எந்தவொரு பிரச்னையும் இருக்காது என்பதையும் Fahmi சுட்டிக்காட்டினார்.

அந்த தரவுகளை திருடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அதன் புள்ளி விவரங்களை திருடர்கள் திறக்க முடியாது என்றும் அவர் அவர் கூறினார். பெர்னாமா ஏற்பாட்டில் நடைபெற்ற சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது Fahmi இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!