
ஈப்போ, அக்டோபர்-10, பேராக், தெலுக் இந்தானில் வங்காளதேசி ஒருவர் சக நாட்டவர்களால் கொல்லப்பட்டார்.
குத்தகைத் தொழிலாளியான 27 வயது அந்நபரின் சடலம், Taman Lagenda Phase 3-யில் 3 நண்பர்களுடன் தங்கியிருந்த வீட்டின் பின்பக்க புதரில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.
நேற்றிரவு உணவருந்தியதும் தொழுகைக்குச் செல்லலாமென நண்பர் அழைத்த போது வெளியில் சென்றவரை, 8 .30 மணியிலிருந்து காணவில்லை.
இந்நிலையில், இன்று காலை போலீஸ் வந்து பார்த்த போது, நெஞ்சுப் பகுதியில் இரத்தம் வழிந்த நிலையில், கழுத்தில் காயங்களுடன் அவர் இறந்துகிடந்தார்.
இதையடுத்து அவருடன் வீட்டில் ஒன்றாக தங்கியிருந்த 32 முதல் 39 வயதுக்குட்பட்ட 3 சகாக்களும் விசாரணைக்காகக் கைதாகியுள்ளனர்.
அவர்களின் கைப்பேசிகளைப் பறிமுதல் செய்த போலீசார், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைத் தேடி வருகின்றனர்.
சடலம் சவப்பரிசோதனைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.