Latestமலேசியா

PJD இணைப்பை நீக்குவதை மறுபரிசீலனை செய்வீர் குடியிருப்புவாசிகள் அரசுக்கு கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா. ஏப் 22 – பெட்டாலிங் ஜெயா Dispersal Link நெடுஞ்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதற்கான அண்மைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர்கள் குழு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து நெரிச்சலைக் குறைக்க அந்த நெடுஞ்சாலை தொடர்பு திட்டத்திற்கான வளர்ச்சி முக்கியமானது என பெட்டாலிங் ஜயா Taman Medan மக்கள் பிரதிநிதி Razali Abdullah தெரிவித்தார். Taman Medaனில் நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களை பார்க்கும்போது அதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியுமென இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். இப்பகுதியில் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிக அளவில் குடியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம், திட்டத்தைத் தொடரப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, நெடுஞ்சாலையின் சீரமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கான கோரிக்கைகளை பரிசீலிப்பதாக PJD சாலை இணைப்பின் மேம்பாட்டாளர் தெரிவித்தார். புத்ராஜெயா நிர்ணயித்த 11 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகளை அந்த நெடுஞ்சாலையின் ஒப்பந்த நிறுவனம் ஏற்கத் தவறியதை தொடர்ந்து அந்த திட்டம் தொடர்ப்படாது என ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான Fahmi Ibrahim ஏப்ரல் 17ஆம் தேதியன்று தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!