Latestமலேசியா

Prostate அறுவை சிகிச்சையில் கவனக்குறைவு; தாம்பத்ய வாழ்க்கைப் பாதிக்கப்பட்ட முதியவருக்கு 5 லட்சம் ரிங்கிட் இழப்பீடு

ஷா ஆலாம், மே-27, அரசாங்க மருத்துமனையில் மேற்கொண்ட prostate அறுவை சிகிச்சையால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுவதில் தனக்குக் குறைபாடு ஏற்பட்டதாகக் கூறி தொடர்ந்த வழக்கில், 64 வயது முதியவர் 5 லட்சம் ரிங்கிட்டை இழப்பீடாகப் பெறுகிறார்.

மருத்துவக் கவனக்குறைவுக்காக
சுகாதார அமைச்சு, செலாயாங் மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் 5 மருத்துவர்கள் ஆகியோருக்கு எதிராக அவர் வழக்குத் தொடுத்திருந்தார்.

உடலுறவில் பிரச்னை ஏற்பட்டது ஒருபுறம் இருக்க, அதனால் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளானதாகக் கூறி தொடுத்த வழக்கில், ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்தாண்டு அவருக்கு சார்பாகத் தீர்ப்பளித்து, 5 லட்சம் ரிங்கிட்டை இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

எனினும் அத்தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் சென்றது.

அரசாங்கத்தின் மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநிறுத்தியது.

இதையடுத்து அம்முதியவருக்கு 5 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது.

இத்தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீடு செய்யுமா என்பது குறித்து தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!