Latestமலேசியா

Puncak Titiwangsa ஓய்வுப் பகுதிக்கு அருகே விபத்து! ஒருவர் மரணம், ஐவர் காயம்

கிரிக், மார்ச் 23 – ஜெலிக்குச் செல்லும் வழியில், Puncak Titiwanga ஓய்வு நிறுத்தம்
அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு , மேலும் ஐவர் காயம் அடைந்தனர்.

இன்று காலை மணி 11.24க்கு நடந்த இந்தச் சம்பவம் குறித்து தமது துறைக்கு அழைப்பு வந்ததாகக் பேராவிலுள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைக்கான உதவி இயக்குநர் சபரோட்சி நோர்
(Sabarodzi Nor Ahmad ) தெரிவித்தார்.

Perodua Ativa மற்றும் Kia Forte ஆகிய இரு கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் புரோடுவா Ativa கார் கவிழ்ந்து கால்வாய்க்குள் விழுந்த வேளையில் Kia Forte கார் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

Atvia காரில் ஒரு ஆடவரும் இரண்டு பெண்களும் காயம் அடைந்தவேளையில் அக்காரில் இருந்த மற்றொரு ஆடவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்.

அதே வேளையில் Kia Forte காரில் இருந்த ஒரு ஆடவரும் ஒரு பெண்ணும் காயம் அடைந்தனர். கவிழ்ந்து கிடந்த புரோடுவா Ativa காரில் சிக்கிக் கொண்டவர்களை வெளியே மீட்பதற்கு தீயணைப்புப் படையினர் சிறப்பு கருவியை பயன்படுத்தினர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த ஐவரும் தீயணைப்பு படையின் அவசர பிரிவின் வாகனம் மற்றும் சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ் வண்டியின் மூலம் Jeli மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!