
கோலாலம்பூர், மே-3-நேற்றிரவு கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave இசை விழாவில் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம், கொண்டாட்டத்தில் இருந்த மக்களைப் பீதியில் ஆழ்த்தியது.
கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, சுமார் 30,000 பேர் திரண்டிருந்த கூட்டத்துக்கு நடுவே 32 வயது பெண் சமையலறை கத்தியை கையில் வைத்துக்கொண்டு ஆக்ரோஷமாகச் செயல்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அங்கிருந்தத பொது மக்களும் பாதுகாப்புப் பணியாளர்களும் உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீஸார் அவரைக் கைதுச் செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்தச் செயலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காகத் அப்பெண் தடுத்து வைக்கப்படுகிறார்.
நேற்றைய நிகழ்வில் சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் காங் சிங் கலந்துகொண்டார்.



