புத்ரா ஜெயா, ஆக 14 – 10.7 பில்லியன் ரிங்கிட் குத்தகைக்கு KTMB எனப்படும் மலேயன் ரயில்வேய்க்காக 62 ரயில்களை பெறுவதற்கான உடன்பாட்டில் சீனாவுடன் மலேசியா கையெழுத்திடவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ( Anthony Loke ) தெரிவித்திருக்கிறார்.
30 ஆண்டுகள் தவணையில் செலுத்தப்படும் கடன் ஏற்பாடுகள் அடிப்படையில் இந்த உடன்பாடு அமையும். விரைவில் சீன தரப்புடன் பேச்சுக்கள் முடிவுற்ற பின் உண்மையான செலவுத் தொகை தெரியவரும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
தற்போது KTMB பயன்படுத்திவரும் பயணிகளுக்கான 90 விழுக்காடு ரயில்களில் 68 China Railway மற்றும் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான Rolling Stock Corporation தயாரிப்பாகும். தண்டவாள சேவைக்காக அரசாங்கம் கோடிக்கணக்கான ரிங்கிட்டை முதலீடு செய்திருந்தாலும் மலேசியாவில் ரயில் சேவையை 30 விழுக்காடு மட்டுமே இருப்பதாக அந்தோனி லோக் தெரிவித்தார்.