Latestஉலகம்

RM14.94 மில்லியன் ரொக்கம்: குடியிருப்பின் சுவர்கள், தரைகள் மற்றும் தளவாடங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன

ரோம், செப்-23-இத்தாலியின் Caivano பகுதியிலுள்ள Naples எனுமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், குடியிருப்பொன்றின் சுவர்கள், தரைகள் மற்றும் தளவாடங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14.94 மில்லியன் ரிங்கிட் (3.2 மில்லியன் யூரோ) ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

50 யூரோ நோட்டுகளாக இருந்த பணம் பிளாஸ்டிக் உறைகளில் சுற்றப்பட்டு, தரை ஓடுகளுக்கு அடியிலும் சுவர்களுக்குள்ளும், அலமாரிகளில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறைகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக Naples Carabinieri காவல் துறை தெரிவித்தது.

சோதனையில் 11 ஆடம்பர Rolex கைக்கடிகாரங்கள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. பணத்தை கவச வாகனத்திற்கு மாற்றுவதற்கு முன், காவல்துறையினர் பிளாஸ்டிக் வாளிகளைப் பயன்படுத்தி பணத்தை வெளியே எடுத்ததாகக் கூறப்படுகிறது.

சிறையில் உள்ள கைதிகளுக்கு ரகசியமாகக் கொண்டு செல்லப்பட்ட அலைபேசிகளைக் கண்காணித்ததன் மூலம் முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 34 பேரும் Caivano பகுதியில் செல்வாக்குமிக்கதாகக் கூறப்படும் ‘Angelino’ சட்டவிரோதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது. மாஃபியா பாணியிலான குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!