Latestமலேசியா

RM14,000 லஞ்சம் பெற்றது தொடர்பில் இரண்டு உயர் அதிகாரிகளை MACC தடுத்து வைத்துள்ளது

சிரம்பான்,ஆக 6 – சிரம்பானில்  ஒரு அமைப்பைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் மொத்தம் 14,000 ரிங்கிட்  லஞ்சம் கேட்டது மற்றும் அதனை வாங்கியது தொடர்பில்   தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.   30 மற்றும்  40 வயதுடைய அந்த இருவரையும்   இம்மாதம்  12 ஆம்தேதி வரை ஏழு நாட்களுக்கு தடுத்துவைக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விண்ணப்பத்திற்கு  மாஜிஸ்திரேட்   Syed Farid Syed Ali அனுமதி வழங்கினார்.  

ஒரு  நிறுவனத்திற்கு  கணினி மற்றும் அலுவலக உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு  விநியோகிப்பாளர்  ஒருவரை நியமிப்பது தொடர்பில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அந்த இருவரும்,  நேற்று MACC அலுவலகத்தில்  வாக்குமூலம் அளிப்பதற்கு  அழைக்கப்பட்ட பின்னர் அவர்கள்  தடுத்து வைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் சந்தேக நபர்களின் கணக்கில் லஞ்சப் பணம் சேர்க்கப்பட்டதாக  தெரிகிறது.   இந்த விவகாரம்     2009 ஆம் ஆண்டின் MACC சட்டத்தின்   பிரிவி  17   () வின் கீழ்  விசாரிக்கப்பட்டு வருவதாக    நெகிரி செம்பிலான்   MACC  இயக்குனர் Awgkok Ahmad Taufik Putra  Awg Ismail  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!