Latestமலேசியா

RM2.8 மில்லியன் லஞ்ச வழக்கு; 3 குற்றச்சாட்டுகளிலிருந்து புங் மொக்தாரின் மனைவி விடுதலை

கோலாலம்பூர், ஜூலை-20-150 மில்லியன் ரிங்கிட் யூனிட் டிரஸ்ட் முதலீட்டு சம்பந்தப்பட்ட 2.8 மில்லியன் ரிங்கிட் லஞ்ச ஊழல் வழக்கில், காலஞ்சென்ற தமது கணவர் Datuk Seri Bung Moktar Radin -னுக்கு உடந்தையாக இருந்ததாகச் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நடிகை Zizie Izette Abdul Samad விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.

FELCRA-வின் செயல் சாரா தலைவராக இருந்த போது Bung Moktar, 150 மில்லியன் ரிங்கிட்டை Public Mutual யூனிட் டிரஸ்டில் முதலீடு செய்யும் வகையில், Felcra-வின் ஒப்புதலைப் பெற்றுத் தருவதற்காக, லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

முகவர் Mahdi Abdul Hamidட்டிடம் இருந்து 2.2 மில்லியன் ரிங்கிட்டும், மற்றொரு முறை 2 லட்சத்து 62,500 ரிங்கிட்டும், பின்னர் Norhaili என்பவரிடமிருந்து 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரிங்கிட்டையும் லஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

அக்குற்றங்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு தாமான் மெலாவாத்தி பகுதியில் உள்ள Public வங்கி கிளையில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், சபா, Kinabatangan முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான Bung Moktar கடந்தாண்டு காலமானதைத் தொடர்ந்து, அவர் மீதான மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளும் ஏற்கனவே நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!