Latestமலேசியா

‘RM200 தற்போதைக்கு நிலைநிறுத்தம்’ ; புடி மடானி தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க MOF தயார்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 11 – தற்போது 200 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் புடி மடானி (Budi Madani) உதவித் தொகையை, எதிர்காலத்தில் அதிகரிப்பது குறித்து பரிசீலிக்க நிதி அமைச்சு தயாராக உள்ளது.

எனினும், தற்போது இலக்கிடப்பட்ட மானிய திட்டத்திற்காக வழங்கப்படும் அந்த 200 ரிங்கிட் தொகை நிலைநிறுதப்படுவதாக, நிதி துணையமைச்சர் லிம் ஹுய் யிங் (Lim Hui Ying) தெரிவித்துள்ளார்.

பல தரப்புகளுடன் நிதி அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் அடிப்படையில், அந்த தொகை போதுமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் துணையமைச்சர் கூறியுள்ளார்.

லிட்டர் கொள்ளளவை அடிப்படையாக கொண்டு, அந்த உதவித் தொகைக்கான வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அளவை கொண்டு அல்ல எனவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

நேற்று தொடங்கி, நாட்டில் டீசல் விலை, சந்தை விலைக்கு ஏற்ப மிதவை முறையில் நிர்ணயிக்கப்படும் வேளை ; தீபகற்ப மலேசியாவில் ஒரு லிட்டர் டீசல், மூன்று ரிங்கிட் 35 சென்னாக விற்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!