Latestமலேசியா

RM90,000 மதிப்புள்ள சொகுசு கைப்பைகள் கொள்ளை: முகமூடி கும்பலை தேடும் போலீஸ்

சைபர்ஜெயா, ஜூன்-13-சைபர்ஜெயாவில் உள்ள பேரங்காடியொன்றில் சுமார் 90,000 ரிங்கிட் மதிப்புள்ள 25 சொகுசு கைப்பைகளைக் கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த 3 நபர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நேற்று நடந்த இச்சம்பவத்தில், கழிவறைக் கண்ணாடி வழியாக உள்ளே நுழைந்த அந்த முகமூடி கும்பல், சில நிமிடங்களிலேயே கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியது.

குற்றவாளிகளின் அடையாளங்களைக் கண்டறியும் நோக்கில், சம்பவ இடத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் உள்ள CCTV கேமரா காட்சிகளைப் போலீஸார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

​இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால், உடனடியாக போலீஸ் நிலையத்தை அணுகி தகவல் வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!