Latestஉலகம்விளையாட்டு

‘Paul the Octopus’ காலம் முடிந்தது: 2026 உலகக்கிண்ண வெற்றியாளரை கணிக்க களமிறங்கிய AI

மெக்சிகோ சிட்டி, ஜூன்-13-முந்தைய உலகக் கிண்ணப் போட்டிகளில் துல்லியமாக கணித்த ‘Paul’ என்ற கணவாயின் இடத்தை, இந்த 2026 உலகக் கிண்ணக் கணிப்புகளில் AI Chatbot- கள் பிடித்துள்ளன.

பொது மக்கள் மத்தியில் AI பரவலான பிறகு நடக்கும் முதல் உலகக் கிண்ணப் போட்டி இது என்பதால், வெற்றியாளர்களைக் கணிக்க இரசிகர்கள் முதல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வரை இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் ChatGPT, Gemini மற்றும் Claude போன்ற மேற்கத்திய AI செயலிகள் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகள் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றன.

​ஆனால், சீன தயாரிப்புகளான Deep-Seek மற்றும் Qwen ஆகிய AI செயலிகள் அர்ஜென்டினாவே மீண்டும் கிண்ணத்தை வெல்லும் என கணித்துள்ளன.

இதற்கிடையில், ஜெர்மனியின் L.M.U பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வீரர்களின் காயம் மற்றும் பந்தய நிலவரங்களை AI எவ்வாறு துல்லியமாகக் கணிக்கிறது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

​ஆட்ட அரங்கில் AI கோல் அடிக்காது என்றாலும், இந்த முறை உலகக் கிண்ணத்தை வெல்லப்போகும் அணிக்கு பின்னணியில் AI முக்கியப் பங்காற்றும் என நிபுணர்கள் கருதுகின்றனர்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!