கோலாலம்பூர், நவம்பர்-26, RON 95 பெட்ரோலுக்கான மானியத்தை வெளிநாட்டவர்களின் வாகனங்களும் அனுபவிப்பதை அனுமதிக்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை.
பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி அதனைத் தெரிவித்துள்ளார்.
12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ளது போல் நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப அம்முடிவு அமைவதாக அவர் சொன்னார்.
RON 95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட மானிய முறை வெளிநாட்டவர்களை உட்படுத்தாத பட்சத்தில், அரசாங்கம் 0.3 பில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்துமென்றார் அவர்.
புருணை நாட்டின் வாகனங்கள் மலேசியாவில் RON 95 பெட்ரோலைப் பயன்படுத்த அனுமதிக்கும் திட்டமேதும் அரசாங்கத்துக்கு உண்டா என, மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரஃபிசி பதிலளித்தார்.
85 விழுக்காட்டு மலேசியர்களை உட்படுத்திய இலக்கிடப்பட்ட மானிய முறை அடுத்தாண்டு மத்தியில் அமுலுக்கு வருகிறது.
மானியத்தைப் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிப்பதில், PAKW எனப்படும் சராசரி வாழ்க்கைக்கான குடும்பங்களின் அடிப்படை செலவினங்கள் கணக்கில் கொள்ளப்படும்.