Latestஉலகம்மலேசியாவிளையாட்டு

SEA கிண்ண ஸ்குவாஷ் போட்டி: சஞ்சய் ஜீவா – செவீத்ராவின் அதிரடியால் மலேசியாவுக்குத் தங்கம்

மணிலா, ஜூன்-10 வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரங்களான Sanjay Jeeva மற்றும் K. Sehveetrra-வின் அதிரடி ஆட்டத்தின் வாயிலாக, உபசரணை அணியான பிலிப்பின்சை 2-0 என தோற்கடித்து
SEA கிண்ண ஸ்குவாஷ் போட்டியின் கலப்புக் குழு பிரிவில் மலேசியா தங்கப் பதக்கம் வென்றது.

புதன்கிழமை ஆடவர் ஒற்றையர் பிரிவில் வாகை சுடிய Sanjay, நேற்றைய இறுதியாட்டத்தில் David Pelino-வை 11-5, 11-8, 11-7 என்ற புள்ளிக்கணக்கில் 24-கே நிமிடங்களில் தோற்கடித்து நாட்டுக்கான முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார்.

அடுத்து களமிறங்கிய Sehveetrra, Jemyca Aribado-வை 11-1, 12-10, 11-5 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து மலேசியாவின் வெற்றியை உறுதிச் செய்தார்.

அவர் அவ்வாட்டத்தை முடிக்க எடுத்துக் கொண்டது வெறும் 28 நிமிடங்கள் மட்டுமே.

தனது அவ்வாட்டம் குறித்து கருத்துரைத்த Sehveetrra, தனது போட்டியாளர் அழுத்தம் கொடுத்த போதும் அவற்றைச் சமாளித்து நேரடி செட்களில் வெற்றிப் பெற்றது மகிழ்ச்சியே என்றார்.

ஆடவர் ஒற்றையர், கலப்புக் குழு பிரிவுகளைத் தவிர்த்து மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளிலும் மலேசியா தங்கம் வென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!