Latestஉலகம்

Shein தயாரிக்கும் பொருட்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் இராசயணம் அதிகளவில் சேர்ப்பு; தென் கொரியா தகவல்

சியோல், மே-29 – இணைய விற்பனையில் பெயர் பெற்ற சீன நிறுவனம் Shein விற்பனை செய்யும் சிறார்களுக்கான பொருள்களில் அனுமதிக்கப்பட்டதை விட நூற்றுக்கணக்கான மடங்கு அதிகமாக நச்சுப் பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Shein, சிறார்களுக்கான பல்வேறு வகையான ஆடைகளையும் ஆபரணங்ளையும் தயாரித்து விற்று வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அது உலகம் முழுவதும் படு பிரபலமடைந்து வருகிறது.

அதன் அண்மைய தயாரிப்பான தோல் பை, இடைவார், காலணி உள்ளிட்ட பொருட்களில் பிளாஸ்டிக்கை மெருதுவாக்கும் ஒரு வகை இராசயணம் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாகக் கலக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரு ஜோடி காலணியில் 428 மடங்கு அதிகமாக phthalates எனும் அந்த இராசயணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அழகு சாதனப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றிலும் அது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், ஹார்மோன் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதுடன், உடல் பருமன் பிரச்னை, இதய நோய், சில வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட கோளாறுகளுடனும் அந்த இராசயணம் காலங்காலமாகவே தொடர்புப்படுத்தப்படுகிறது.

எனவே, பாதுகாப்புக் கருதி சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனையில் இருந்து மீட்டுக் கொள்ள தென் கொரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!