கோலாலம்பூர், ஏப்ரல்-3, 3.9 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க வாகனங்களின் கொள்முதல் மற்றும் நிர்வகிப்பு குத்தகையை, ஐந்தாண்டுகளுக்கு முன் நிதியமைச்சை ஏமாற்றிப் பெற்றதாக, SPANCO நிறுவனத்தின் தலைவர் Tan Sri Robert Tan Hua Choon மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலை தம் மீது சுமத்தப்பட்ட அக்குற்றச்சாட்டை, 83 வயது Tan Hua Choon மறுத்து விசாரணைக் கோரினார்.
புத்ரா ஜெயாவில் உள்ள நிதியமைச்சின் கட்டடத்தில் 2019 பிப்ரவரி 27-க்கும் 29-க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிக்கைத் தெரிவிக்கிறது.
குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருப்பதால், அவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
அந்த Tan Sri-யை 20 லட்சம் பிணைத்தொகை மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.
ஜூன் நான்காம் தேதி வழக்கு செவிமெடுப்புக்கு வருகிறது.
வழக்கு முடியும் வரை கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு அவர் உத்தரவிடப்பட்டார்.
மூன்றாம் தரப்பின் உதவியுடன் சாட்சிகளைக் கலைக்க முயலக் கூடாது என்ற எச்சரிக்கையோடு, 2 மாதங்களுக்கு ஒரு முறை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.