
ஜோகூர் பாரு, Skudaiயில் அமைந்துள்ள PTSI எனப்படும் Pusat Tuisyen Sinaran Intensif, 2025 SPM தேர்வில் அதன் மாணவர்களின் சிறப்பான சாதனைகளை கொண்டாடியுள்ளது.
மொத்தம் 280 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், அவர்களில் 52 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A பெற்று மிகச் சிறந்த சாதனையைப் பதிவுச் செய்துள்ளனர்.
22 வருடங்களாக 99 விழுக்காட்டு இந்திய மாணவர்களை கொண்டு இயங்கி வரும் இம்மையம், ஒவ்வோர் ஆண்டும் நல்ல அடைவுநிலையைப் பதிவுச் செய்து வருகிறது
இதனிடையே இந்த வெற்றியை முன்னிட்டு பேசிய PTSI நிர்வாக இயக்குர் சுஜாந்தி கிருஷ்ணன், மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பே இந்த வெற்றிக்கு காரணம் என்றார்
20 ஆண்டுகளுக்கும் மேலான PTSIயின் வலுவான நிர்வாகமும் இவ்வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறிய சுஜாந்தி, இந்த சிறப்பான அடைவுநிலை ஆண்டுதோறும் தொடரும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவ்வேளையில், இம்மையத்தில் படித்து சிறப்புத் தேர்ச்சியைப் பதிவுச் செய்த மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் SPM தேர்வில் இந்திய மாணவர்களின் தேர்ச்சி அதிகரித்துகி கொண்டே வருகிறது.
கல்வியறிவு பெற்ற சமுதாயமாக நாம் மேம்பட்டு வருகிறோம் என்பதை இது உணர்த்துகிறது.
இதற்கு, கடுமையாக உழைக்க மாணவர்கள் தயார் நிலையில் இருந்தாலும் PTSI போன்று மாணவர்களுக்கு வழிகாட்ட தரமான ஆசான்கள் இருக்கும் வரை இந்த வெற்றியாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே இருக்கும் என்பது நிச்சயம்.



