Latestமலேசியா

Sprint நெடுஞ்சாலையில் மதுபோதையில் எதிர்திசையில் சென்ற ஓட்டுநர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-11-Sprint நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை
மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் ஒருவர், எதிர்திசையில் வாகனமோட்டி பெரும் அபாயத்தை ஏற்படுத்தினார்.

அவ்வாடவர், ஒரு e-hailing ஓட்டுநருடன் தகராறு ஏற்பட்டதையடுத்து, அவரின் காரைக் கைப்பற்றியதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, நேற்று அதிகாலை 2 மணிக்கு அந்நபர் கைதுச் செய்யப்பட்டார்.

ஆபத்தாக வாகனமோட்டியது, மதுபோதையில் வாகனமோட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக விசாரிக்கப்பட ஏதுவாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் எதிர் திசையில் வாகனமோட்டும் வீடியோ முன்னதாக வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!