
அலோஸ்டார், ஏப்-22- அலோஸ்டார் , Jalan Pegawai போக்குவரத்து சிக்னல் அருகே, 61 வயதான ஓட்டுநர் நேற்று தனது ஹோண்டா SUV வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைப் பாதைக்குள் சென்றதால், ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டன.
பிற்பகல் மணி 2.33க்கு நடந்த இந்த விபத்தில், ஒரு மெர்சிடிஸ்-பென்ஸ், இரண்டு பெரோடுவா ஆக்சியா கார்கள் மற்றும் ஒரு பெரோடுவா Ativa காரும் சம்பந்தப்பட்டிருந்தன.
இந்த விபத்தில் SUV ஓட்டுநருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதோடு 53 வயதுப் பெண்ணும், 25 வயது இளைஞரும் காயமின்றி தப்பினர்.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஓட்டுநருக்கு இரு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன.
SUV வாகன ஓட்டுநர் தனது வாகனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறியதே இந்த விபத்திற்குக் காரணம் என்று தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக Kota Star போலீஸ் தலைவர் சைட் பஸ்ரி சைட் அலி ( Syed Basri Syed Ali )i தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்து சட்டத்தின் 10-வது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு இந்த விபத்து தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



