Latestமலேசியா

அசிட் தாக்குதலால் 4ஆம் நிலை தீக்காயத்திற்கு உள்ளான தேசிய காற்பந்து விளையாட்டாளர் Faisal Halim தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கோலாலம்பூர், மே 7 – எரிதிரவகம் எனப்படும் அசிட் தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து  உடலில் நான்காம் நிலை தீக்காயங்களுக்கு உள்ளான தேசிய காற்பந்து விளையாட்டாளர்   Faisal  Halim  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

தொடக்கத்தில்   தனது  உடலில்  இரண்டாம் நிலை  தீக்காயங்கள் இருந்ததால்  நேற்று முன் தினம்  அவருக்கு   4 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக  சிலாங்கூர் காற்பந்து சங்கத்தின்   துணைத் தலைவர்  Shahril   Mokhtar    தெரிவித்தார்.  

அவரது  தோல் நிலைமையைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதால்  சிலாங்கூர்  காற்பந்து கிளப்பின் Panel    மருத்துவமனைக்கு  Faisal  மாற்றப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டது. 

நேற்று  நண்பகலில் அவருக்கு ஏற்பட்ட தீக்காயம்  நான்காம் நிலையாக இருப்பதால்  நிலைமை மோசமாக இருந்ததாக   எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.  தனது இடது கை இருப்பதைக்கூட  அவரால் உணரமுடியவில்லை. அவரது நிலைமை சீராக இருக்கிறது. ஆனால்  உடலின் தோள் நல்ல நிலையில் இல்லையென  Shahril  Mokhtar   கூறினார். 

அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை அல்லது அதற்கும் கூடுதலான அறுவை சிகிச்சைகள்   மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். அவரால்  தெளிவாக  பேசமுடியவில்லை.  அறுவை சிகிச்சைக்குப் பிறகு   குறைந்தது  10 நாட்களுக்கு  Faisal   தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும். அவர் மேலும் நான்கு வாரங்களுக்கு தொடர்ந்து  மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும்   என்றும்  Shahril Mokhtar   தெரிவித்தார். 

 Kota  Damansara  வர்த்தக  தொகுதியில் go-karting  நிகழ்வில்  கலந்துகொண்ட பின் அவர் மீது அடையாளம் தெரியாத ஆடவன் அசிட் தாக்குதல் நடத்தினான்.  இதனிடையே  இந்த தாக்குதல்  தொடர்பில்   சந்தேகத்திற்குரிய  20 வயதுடைய  ஆடவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!