Latestமலேசியா

ஜூலை இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – பொருளாதார அமைச்சர்

பெட்டாலிங் ஜெயா, மே-25 – உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்தாலும், ஜூலை 2026 இறுதி வரை நாட்டின் எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருக்கும் என பெட்ரோனாஸ் அரசாங்கத்துக்கு உறுதியளித்துள்ளதாக பொருளாதார அமைச்சர் அக்மால் நசீர் (Akmal Nasir) தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் (Hormuz) நீரிணையைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி விலை உயர்வை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

அதேவேளை, மே 18 முதல் 22 வரை கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பீப்பாய்க்கு 109.85 அமெரிக்க டாலரிலிருந்து 111.67 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நாட்டில் வேலை இழப்போர் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 7,057 ஆக அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் பதிவான 5,855 பேரைவிட அதிகமாக இருந்தாலும், ஜனவரியில் பதிவான 10,658 பேரைவிட குறைவாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!