Latestமலேசியா

நீடித்த வெப்பம் தொடர்ச்சியான மழையினால் கிள்ளானில் டிங்கி காய்ச்சல் அதிகரிப்பு

கிள்ளான், பிப் 19 – கிள்ளான் வட்டாரத்தில் , டிங்கி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வழக்கத்திற்கு மாறான வெப்ப நிலை மட்டுமின்றி மழையின் காரணமாக ஏடிஸ் கொசு பெருக்கம் அதிகரித்திருப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதாக கிள்ளான் மாநகர் மன்றத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இவ்வாண்டு தொடங்கியது முதல் வாரந்தோறும் கிள்ளானில் சராசரி 274 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. கிள்ளான் நகரில் இந்த ஆண்டு ஒருவர் உயிரிழப்புக்கு உள்ளானதோடு 1,920 பேர் டிங்கி காய்ச்சலுக்கு உள்ளாகினர். இதற்கு முந்தைய வாரம் அந்த எண்ணிக்கை 1,597 என்று பதிவாக இருந்ததாக அரச கிள்ளான் மாநகர் மன்றத்தின் சுகாதார இயக்குநர் Azmi Muji தெரிவித்தார்.

Bandar Botanic கில் Kasuarina அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 35 பேரும் , Jalan Batu Nilam மில் 34 அடுக்கு மாடி வீடுகளில் 21 பேரும், Bandar Sultan Sulaiman பி.கே.என்.எஸ் அடுக்கு மாடி குடியிருப்பில் 15 குடியிருப்புவாசிகளும் டிங்கி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். அதிகரித்துவரும் டிங்கி காய்ச்சலை துடைத்தொழிப்தற்கு கூட்டு சமூக நடவடிக்கை மற்றும் டிங்கி தொடர்பான விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்று ம் Azmi தெரிவித்தார். இவ்வாண்டு கிள்ளான் செந்தோசாவில் 368 பேரும் , மேருவில் 286பேரும் , செமந்தாவில் 267 பேரும் , கோத்தா கமுனிங்கில் 233 பேரும் , பண்டார் பாரு கிள்ளானில் 201 பேரும் டிங்கி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!