
ஷா அலாம், ஜூலை 2 – கோலா லங்காட், பண்டார் சவ்ஜானா புத்ரா, Bandar Tropicana Aman னில் ஒரு வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆடம்பர வாகனங்கள் எரியூட்டப்பட்டதில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களை போலீசார் தற்போது தீவிரமாக தேடிவருகின்றனர்.
பல்வேறு வாகனங்கள் எரிவது குறித்து காலை மணி 6.45 அளவில் ஒரு ஆடவரிடமிருந்து அவசர அழைப்பை பெற்றதாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் அக்மால்ரிசால் ரட்ஷி, ( Mohd Akmalrizal Radzi) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். தீயில் எரிந்த அனைத்து வாகனங்களும் ஆடவர் ஒருவருக்கு சொந்தமானதாகும்.
நான்கு ஆடவர்கள் அந்த வாகனங்களுக்கு தீவைத்த பின்னர் அங்கிருந்து தப்பியோடியதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதோடு தண்டனைச் சட்டத்தின் 435 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவரின் வீட்டின் முன்புற பகுதியில் சேதம் ஏற்பட்டதோடு இதனால் 1.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.