Latestஉலகம்

அமெரிக்காவில் டெக்சாஸில் மருத்துவமனை அவசரப் பிரிவில் கார் மோதியது; ஒருவர் மரணம், 10 பேர் காயம்

ஹோஸ்டன், பிப் 15 – அமெரிக்காவில் டெக்சாஸ், ஆஸ்டின் நகரிலுள்ள மருத்துவமனையின் அவசரப் பிரிவில் கார் ஒன்று மோதியதில் ஒருவர் மரணம் அடைந்ததோடு குறைந்தது 10 பேர் காயம் அடைந்தனர். செயின்ட் டேவிட் வட ஆஸ்டின் மருத்துவ மையத்தில் நேற்று மாலை மணி 5.30 அளவில் அந்த விபத்து நிகழ்ந்தது. அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடைபெற்றபோது அந்த விபத்து நடந்ததில் காயம் அடைந்த 10 பேர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த மருத்துவமனையின் சேவைப் பிரிவு முகநூலில் வெளியிட்ட குறிப்பில் தெரிவித்துள்ளது. இது வழக்கமான விபத்து என்பதால் குற்றச்செயல் அம்சம் எதுவும் இல்லையென ஆஸ்டின் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் கார் ஓட்டுனர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!