Latestமலேசியா

கே.எல்.ஐ.ஏ அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத் துறையின் 60 முகப்பிடங்கள்

சிப்பாங், டிச 6 –  கே.எல்.ஐ.ஏ எனப்படும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நெரிச்சலை குறைக்கும் பொருட்டு மொத்தம் 60 குடிநுழைவு முகப்பிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு ஒரு மாத காலம் விசா இலக்கு அளிக்கப்பட்டதால் வெளிநாடுகளின் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் விமான நிலையத்தில் நுழைவு மையங்களில் கூடுதலாக குடிநுழைவுத்துறையின் 14 முகப்பிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கூடுதல் முகப்பிடங்களைச் தொடர்ந்து தற்போது நெரிசலை குறைப்பதற்கு உதவியாக மொத்தம் 60 முகப்பிடங்கள் இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.

குடிநுழைவுத் துறையின் அனைத்து 60 முகப்பிட சேவைகள் பரபரப்பான நேரத்தில் கட்டாயம் திறக்கப்பட்டிருக்க வேண்டும். இதன்வழி விசா விலக்கு திட்டத்தின் கீழ் வெளிநாட்டிலிருந்து வந்தடையும் வருகையாளர்களுக்கான கடப்பிதழ் பரிசோதனைகள் விரைவுப்படுத்த முடியும்.

மேலும் 2026-ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை அமைவதாக குடிநுழைவுத் துறையின் புதிய முகப்பிடங்களை குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ருஸ்லின் ஜூசோவுடன் பார்வையிட்ட பின் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது சைபுதீன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!