Latestமலேசியா

பெருநாள் காலத்தில் சபா, சரவாகிற்கு விமான டிக்கெட் விலை அதிகபட்சம் RM599; மலேசிய ஏர்லைன்ஸ் மற்றும் ஃபயர்பிளை ‘Firefly’ சிறப்புச் சலுகை

கோலாலம்பூர், டிச 29 – மலேசியன் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஃபயர்பிளை  ‘Firefly’, கோலாலம்பூர் மற்றும் பினாங்கிலிருந்து சபா, சரவாக் மாநிலங்களுக்கு குறிப்பிட்ட பெருநாள் காலங்களில் ஒரு வழி பயணத்திற்கான விமான டிக்கெட் விலை அதிகபட்சம் RM599 என விலையை நிர்ணயித்துள்ளன.

கடந்த 15ஆம் திகதி மலேசிய போக்குவரத்து அமைச்சு, பெருநாள் காலங்களில் கட்டணங்களுக்கு விமான டிக்கெட் மானியம் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, ஜனவரி 1-ஆம் திகதியிலிருந்து, இந்த சிறப்பு சலுகை வழங்கப்படவுள்ளது. சீன பெருநாள், நோன்பு பெருநாள், காவாய் திருநாள் மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய பெருநாட்களுக்கு இந்த சலுகைகள் வழங்கபடுகின்றன.

மலேசிய ஏர்லைன்ஸின் புத்தாண்டுக்கான சிறப்பு சலுகையாக, ஜனவரி 9ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதி வரையில் டிக்கெட் வாங்குபவர்களுக்கு, ஒரு வழி உள்நாட்டு பயணங்களுக்கு RM79 ரிங்கிட்டிலிருந்தும், வெளிநாட்டு பயணங்களுக்கு RM219 ரிங்கிட்டிலிருந்தும் விலை தொடங்குகின்றன. இந்த பயணங்களை அவர்கள் ஜனவரி 9 தொடங்கி நவம்பர் 30க்குள் செய்தாக வேண்டும் எனவும் அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!