Latestமலேசியா

100 மணி நேரம் இடைவிடாமல் ஓவியம் வரைந்து உலகச் சாதனை

நைஜீரியா, ஜன 5 – நைஜீரியாவைச் சேர்ந்த சன்செல்லார் அஹகோது என்ற மாணவர் தொடர்ந்து 100 மணி நேரம் ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். 

4 நாள்களில் அவர் பிரபலங்கள் தொடங்கி உணவு வகைகள், செடிகள், விலங்குகள் என 106 ஓவியங்களை வரைந்துள்ளார். ஓவியங்கள் எப்போதும் தமது மனநிலையைப் பிரதிபலிக்க உதவுவதாக அவர் கூறியிருக்கின்றார்.

இது நீண்ட நேரச் சாதனை முயற்சி என்பதால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை 5 நிமிட ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், 88ஆவது மணி நேரத்தில் தாம் மிகவும் களைப்படைந்ததாகச் கூறியுள்ள அவர் அந்த நேரம் தமக்கு மிகப் பெரிய போராட்டமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

இதன்வழி இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு ரோலண்ட் பால்மெர்ட்ஸ் என்பவர் செய்த 60 மணி நேரச் சாதனையை அவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!