Latestமலேசியா

கிள்ளானைச் சேர்ந்த சத்தியராவ்; UniSZA பல்கலைக்கழகத்தின் அரச விருதை வென்ற முதல் இந்திய மாணவர்

பெட்டாலிங் ஜெயா, டிச 6 – Sultan Zainal Abidin (UniSZA) பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான அரச விருதை பெற்ற முதல் இந்திய மாணவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கிள்ளானைச் சேர்ந்த சத்தியராவ் சத்திய நாராயண ராவ்.

எழுவர் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் சமீபத்தில்தான் கடலியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

இராணுவத்திலிருந்து ஓய்வுப்பெற்றவரான இவரது தந்தை கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் பாதுகாவலராக இருக்கின்றார்.

ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் பேசுவது, படிப்பது மற்றும் எழுதுவதில் சிரமத்தை எதிர்நோக்கிய இவருக்கு பெரும் துணையாக இருந்தது புத்தகங்களும் நூல்களும்தான்.

மூன்றாம் படிவம் வரை கல்வியில் சிறந்த பிரகாசிக்காத இவர்; எந்த பாடத்திலும் ‘ஏ’ பெற்றதில்லையாம். யூ.பி.எஸ்.ஆர் தேர்விலும், பிடி 3 தேர்விலும் கூட இவர் சராசரி தேர்ச்சியைத்தான் தான் பெற்றதாக கூறியிருக்கின்றார் இவர்.

தனது வெற்றிக்கு இன்றளவும் வழிக்காட்டியாகவும் பக்கபலமாகவும் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள், போதித்த ஆசியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் என அனைவருக்கும் தனது நன்றியைக் கூறிக்கொள்ள கடமைப்படுள்ளதாகப் பெருமையாகக் கூறுகின்றார் சத்தியராவ்.

கடலியல் அறிவியல் துறையிலேயே முனைவர் பட்டம் பெற்று சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளராக விளங்க வேண்டும் என்பது சத்தியராவ்வின் எதிர்கால லட்சியமாகும்.

இவர் வாழ்க்கையில் மென்மேலும் வெற்றிப்பெற்று பல சாதானைகள் புரிய வணக்கம் மலேசியா வாழ்த்துகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!