Latestமலேசியா

இன்றிரவு முழு சந்திர கிரகணம்: சந்திரன் சிவப்பாய் மிளிரும் அரிதான விண்வெளி காட்சி

கோலாலம்பூர், மார்ச்-3-மலேசிய வானில் இன்றிரவு அரிதான விண்வெளி நிகழ்வாக முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது…

பரவலாக _Blood Moon_ அதாவது  ‘இரத்தச் சந்திரன்’ என அழைக்கப்படும் இந்நிகழ்வு, இரவு 7.23 மணிக்கு தொடங்கி, 7.33 மணிக்கு உச்சத்தை எட்டும்.

அப்போது சந்திரன் ஆழமான சிவப்பு நிறத்தில் மிளிரும்.

கிரகணம் 10.23 மணி வரை நீடிக்கும்; ஆக மொத்தம் 3 மணி நேரங்களுக்கு மலேசியர்கள் இந்த அதிசயத்தை கண்டுகளிக்கலாம்.

எந்த சிறப்பு கருவியும் தேவையில்லை… வானத்தை நோக்கிப் பார்த்தால் போதும், சிவப்பாய் மாறும் சந்திரனை இரசிக்கலாம்.

இவ்வாண்டு மலேசியாவில் நாம் காணக்கூடிய ஒரே முழு சந்திர கிரகணம் இதுவாகும்.

மறுபடியும் 2028-ஆம் ஆண்டில் தான் இது திரும்ப நிகழும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!