Latestமலேசியா

மலாய்க்காரர்களை குடியேறிகள் எனக் குறிப்பிடுவது தவறு – கல்வியாளர் அஹ்மாட் முராட் கருத்து

மலாக்கா, செப்டம்பர்-27,மலாய் தீவுக்கூட்டத்தில், குறிப்பாகத் மலாய் மண்ணில் (Tanah Melayu) மலாய்க்காரர்களைக் ‘குடியேறிகள்’ என வகைப்படுத்துவது வரலாற்று ரீதியாகச் சரியான அணுகுமுறை அல்ல என, ISTAC-IIUM இயக்குநர் பேராசிரியர் டத்தோ Dr Ahmad Murad Merican தெரிவித்துள்ளார்.

மலாக்காவில் நடைபெற்ற ‘Musyawarah Nasional 3.0’ மாநாட்டில் உரையாற்றிய அவர், மலாய் சமூகங்களின் தொன்மையான வரலாறு, கலாச்சாரம் மற்றும் வட்டார தொடர்புகளைப் புறந்தள்ளிவிட்டு, இன்றைய அரசியல் எல்லைகளின் அடிப்படையில் மட்டும் அவர்களின் நகர்வுகளைக் கணக்கிடக் கூடாது என்றார்.

மலேசியா, சுமத்ரா மற்றும் போர்னியோ ஆகிய நிலப்பரப்புகளுக்கு இடையிலான மலாய் மக்களின் இடப்பெயர்வானது ஒரு குடியேற்றம் அல்ல என்றும்; அது அவர்களின் பாரம்பரிய ‘merantau’ நாடோடி கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

இதனிடையே, அதே நிகழ்வில் பேசிய அரசியலமைப்பு மற்றும் பொதுச் சட்ட நிபுணர் இணைப் பேராசிரியர் டத்தோ Dr Shamrahayu A. Aziz, ‘Tanah Melayu’ என்ற பெயரும் அதன் வரலாற்று அந்தஸ்தும் ஒருபோதும் மறைந்து விடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கூட்டரசு அரசியலமைப்பில் மலாய் மாநிலங்கள் (States of Malaya) மற்றும் மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகிய அதிகாரப்பூர்வ சொற்கள் மூலம் அதன் அடையாளம் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இந்த மாநாட்டைத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!