
ஷா ஆலாம், டிசம்பர் 19-சிலாங்கூர் அரசு, 2026 முதல் இலவசமாக வெளிநாட்டு மொழி வகுப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த வகுப்புகள் இயங்கலை வாயிலாக நடைபெறுமென, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இதில் அரபு, மாண்டரின், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் போன்ற மொழிகளும் அடங்கும்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 10 ரிங்கிட் கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முன்னெடுப்பு, சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் என்றார் அவர்.
இம்முயற்சி, சிலாங்கூர் மக்களின் மொழித் திறனை மேம்படுத்தி, வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.
பாடங்கள் 2026-ஆம் ஆண்டில் தொடங்கும்; பதிந்துகொள்ளும் முறைகள் விரைவில் அறிவிக்கப்படும்.



