Latestஇந்தியா

Zee தொலைக்காட்சியின் சரிகமப இசை நிகழ்ச்சியில் மலேசியாவின் பாடும் குயில் ஹேமித்ரா

சென்னை, டிச 13 – இந்தியாவில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான Zee Tv இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப இசை போட்டி நிகழ்ச்சி. இந்த இசை நிகழ்ச்சியில் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இருந்தும் பலர் தங்களின் பாடும் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் ஆசிய பசிபிக் சிறப்பு அங்கத்தில் மலேசியாவைச் சேர்ந்த ஹேமித்ரா ரவிச்சந்திரன் கலந்துக் கொண்டுள்ளதோடு தனது பாடல் திறனை வெளிப்படுத்தி நடுவர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றுள்ளார்.

செராஸ் மக்கொத்தா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இவர் முன்னதாக சித்தி நூர்ஹலிசாவின் ‘Budi Bahasa Budaya Kita’ எனும் மலாய் பாடலை பாடி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ நிகழ்ச்சியில் ஒளிவழியில் கலந்து இவர் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!