Latestமலேசியா

நெகிரி செம்பிலானில் BN-PN இடையிலான ஒத்துழைப்பு: ஒற்றுமை அரசாங்கத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பாதிக்காது 

புத்ராஜெயா, ஆகஸ்ட்.03- நெகிரி செம்பிலானில் பாரிசான் நேஷனல் (BN) மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (PN) இடையிலான ஒத்துழைப்பு, ஒற்றுமை அரசாங்கத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒரு போதும் பாதிக்காது என அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் Datuk Seri Azalina Othman Said தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமான அரசியல் சூழலையும் தலைமையையும் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கே உரிய அரசியலமைப்பு, தலைமைத்துவம் மற்றும் சுல்தான் அல்லது ஆட்சியாளர்கள் உள்ளனர். எனவே மாநில அளவிலான அரசியல் ஒத்துழைப்பை மத்திய அளவிலான ஒத்துழைப்புடன் ஒப்பிட முடியாது. மத்திய நிலைக்கும் மாநில நிலைக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது என்பதை கட்சியின் தலைமைத்துவம் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளதை Azalina குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் PN கூட்டணியுடன் BN மேற்கொண்ட ஒத்துழைப்பைத் தொடர்ந்து, BN இடம் பெற்றுள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு ஜோகூர் மாநிலச் சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் Datuk Mohd Puad Zarkashi முன்னதாகக் கூறியிருந்தார். அது குறித்து கருத்துரைக்கையில் Azalina அவ்வாறு விளக்கினார்.

ஜோகூரில் BN தனித்துப் போட்டியிட்டது. நெகிரி செம்பிலானில் BNனும் PNனும் ஒத்துழைப்பு மேற்கொண்டன. மலாக்காவைப் பொறுத்தவரை, எம்மாதிரியான ஏற்பாடுகள் இருக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என Azalina மேலும் கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், BN மற்றும் PN கூட்டணிகள் இணைந்து மொத்தம் 25 தொகுதிகளைக் கைப்பற்றி மாநில அரசை அமைத்தன. Pakatan Harapan 11 இடங்களை வென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!